நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்
\மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடை பெற்றது. அதில் உரையாற்றிய கமல்ஹாசன், “தமிழக மக்கள் மீது இந்தி மொழி யைத் திணிக்க முயற்சி செய்கிறார்கள். தங்களுக்கு என்ன மொழி வேண்டும், எந்த கல்வி வேண்டும் என்பது தமிழர்களுக்குத் தெரியும். ஏன் சிறு குழந்தைகள்கூட அறியும். விருப்பமான மொழியை கற்பார்கள். ஆனால், இந்த மொழியைப் படி என்று திணித்தால் தூக்கி வீசி விடுவார்கள். மொழி யும், கல்வியும் அனை வருக்கும் பொதுவானது. இந்த ஆண்டு நாடாளு மன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மநீம-வின் குரல்கள் ஒலிக்கும். எனவே, அடுத்த ஆண்டு தேர்தலுக்கான உழைப்பை இப்போதே தொ டங்க வேண்டும்” என்றார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலா ளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி. மவுரியா, ஆர்.தங்கவேலு, மகளிர் அணி ஒருங்கிணைப் பாளர் நடிகை ஸ்ரீபிரியா, மாநில இளைஞர் அணி செய லாளர் கவிஞர் சினேகன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.
அவகாசம் நீட்டிப்பு
சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரி களில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலைப் படிப்பு களில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர வும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசிய மாகும். இந்தத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த நுழைவுத் தேர்வு களுக்கு விண்ணப்பிக்க பிப்.26 ஆம் தேதி வரை அவ காசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
4-ஆவது முறையாக
சோதனை இராமேஸ்வரம்: மண்டபம் - இரா மேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடி யில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகள் நிறைவடைந்தன. இதை யொட்டி, இந்தப் பாலத்தில் நான்காவது முறை யாக சோதனை ஓட்டம்
நடைபெற்றது. நிவாரணம்
அறிவிப்பு சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள தனி யார் கல்லூரி மாணவர்கள் கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற வாகனம், மூணாறு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உயிரி ழந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிர்ப்பு
சென்னை மாநகர போக்கு வரத்து கழகம் (MTC) 600 தாழ்தள மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து, அவற்றின் பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணிகளை தனியாருக்கு வழங்க டெண்டர் அறிவிப்பு வெளி யிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை கண்டித்து பிப்ர வரி 26 அன்று சென்னை பல்லவன் பணிமனை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக் மற்றும் மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகி யோர் அறிவித்துள்ளனர். தினமும் 625 வழித்தடங்களில் 3,486 பேருந்துகள் மூலம் 31 லட்சம் பய ணிகளுக்கு சேவை செய்யும் எம்டிசி- யை தனியார்மயமாக்குவது பொது போக்குவரத்தின் அடிப்படை நோக்கத் தையே சிதைக்கும் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெண்களுக்கான விடியல் பயணம், மாணவர்களுக்கான இலவச பேருந்து அட்டை, முதியோர்களுக் கான இலவச பயணம் போன்ற மக்கள் நல திட்டங்கள் பாதிக்கப் படும் என்றும் எச்சரித்துள்ளனர். “லாப வெறியை மட்டுமே நோக்க மாகக் கொண்ட தனியார் துறை யிடம் பொது போக்குவரத்தை ஒப்ப டைப்பது ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். புதிய பேருந்துகளை அரசே வாங்கி, பரா மரித்து, இயக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.