விருதுநகர், பிப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 வது அகில இந்திய மாநாடு வரும் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடை பெற உள்ளது. இந் நிலையில், விருது நகர் மாவட்டத் தில் வரவேற்புக்குழு அமைக்கப் பட்டது. விருதுநகரில் தோழர் என்.வி நினைவரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா ளர் ஆ.குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார் வரவேற்புரையாற்றி னார். துவக்கி வைத்து மாநில செயற் குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் பேசினார். கட்சியின் வளர்ச்சி நிதி ரூ.38 லட்சம், அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.3 லட்சம் ஆகியவற்றை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றி னார். பின்பு, மாவட்ட அளவிலான வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில், வரவேற்புக்குழுத் தலைவ ராக எம்.மகாலட்சுமி, செயலாளராக ஆ.குருசாமி, பொருளாளராக எம்.முத்துக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 34 நிர்வாகிகள் உட்பட 200 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மேலும் இதில், மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு, இடைக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.