தஞ்சாவூர்,ஜன.11- கும்பகோணம் கோயில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தர வை அமல்படுத்த ஒத்துழைக் காததால் மாநகராட்சி ஆணை யர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி ஆணையருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து ஜனவரி 27 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது.