tamilnadu

img

பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி, செப்.7- பிடிஆர்  மற்றும் தந்தை பெரியார் வாய்க்  காலிலிருந்து ஒரு போக பாசன நிலங்க ளுக்கான  தண்ணீரை ஆட்சியர் ஆர்.வி.ஷஜீ வனா திறந்து வைத்தார். தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பி னர்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் உத்தரவின்பேரில், திங்கட்கிழமை முதல் கம்பம் பள்ளத்தாக் கிலுள்ள தந்தை பெரியார் மற்றும் பிடிஆர்  வாய்க்காலில் இருந்து ஒரு போக பாசன நிலங்களுக்கு விநாடிக்கு 100 கனஅடி வீதம்  120 நாட்களுக்கு, நீர் இருப்பு மற்றும் நீர்  வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பிடிஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர்,  உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட  சின்னமனூர், வேப்பம்பட்டி, சீப்பாலக் கோட்டை ஆகிய கிராமங்களைச் சுற்றி யுள்ள 830 ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்  திற்கு உட்பட்ட சீலையம்பட்டி, பூம லைக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்க டாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்  பட்டி, கோவிந்தநகரம் மற்றும் பால கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 4,316 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 12 கிராமங்களைச் சுற்றியுள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்வில், உதவி செயற்பொறியா ளர் (பெரியார் வைகை வடிநில உப கோட்டம்) எஸ்.மயில்வாகனன், உத்தம பாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.