தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
சிவங்கை அருகே, தலித் இளைஞன் ஊருக்குள் புல்லட் ஓட்டிச்செல்வதை ஏற்க முடியாத சாதிவெறியர்கள், அந்த இளைஞனை அரிவாளால் வெட்டி கொலைவெறியாட்டம் நடத்தியுள்ளனர். இதில், இடது கை நரம்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் அய்யாசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்ப வத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலை வர் த. செல்லக்கண்ணு, பொதுச்செய லாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 2023-ஆம் ஆண்டே சாதிவெறித் தாக்குதல் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், மேலப்பிடாவூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராமன் – செல்லம்மாள் தம்பதி யரின் மகன் அய்யாசாமி. சிவகங்கை அரசுக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது சித்தப்பா
தொடர்ச்சி 3ஆம் பக்கம்