tamilnadu

img

என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர்  வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்!

நிர்வாகம் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தூத்துக்குடி, மே 16 - தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி தெர்மல் நகரில், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் (NLC Tamil Nadu Power Limited - NTPL)  அனல் மின் நிலையம் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் 1400 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள், தங்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றமும், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தொழிலாளர் களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது.  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணி யாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இணையான ஊதியமும் இதர சலுகை களும், என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற  தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவை  அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால், அதனை ஏற்காத என்டிபிஎல் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.  இதனால், என்டிபிஎல் நிர்வாகத்தின் மேல்முறையீட்டைக் கண்டித்தும், ஊதிய உயர்வு கோரியும் கடந்த ஏப்ரல் 18 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த த்திலும், அனல் மின் நிலையம் முன்பு குடும்பத்துடன் தர்ணாவிலும் ஈடுபட்டு வந்தனர். மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) என்டிபிஎல் கிளை மற்றும் தொழிலாளர் முன்னேற்ற பேரவை என்டிபிஎல் கிளை சார்பில், கடந்த 29 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது 10 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படாத நிலை இருந்து வந்தது.  இந்நிலையில்  மே 15 அன்று இரவு 10  மணியளவில், தொழிலாளர் துறை மண்டல ஆணையர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ் முன்னிலையில் என்டிபிஎல் மற்றும் என்எல்சி நிர்வாக தலைவர்களும் சிஐடியு மற்றும் தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில், நாள் ஒன்றுக்கு 90 ரூபாய் வீதம் கூடுதல் அலவன்ஸ் வழங்கப்படும் என்றும், பணி யின்போது உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் வரை நிவா ரணம் வழங்கும் இறப்பு நிவாரண நிதியம் விரைவில் ஏற்படுத்தப்படும் என்பதுடன், தொழிற்சங்கம் முன்வைத்த மற்ற கோரிக் கைகளும் சாதகமான வகையில் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது.  அந்த உடன்பாட்டின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்வது என்று சிஐடியு மற்றும் தொமுச சங்கங்கள் அறிவித்தன. அதன் அடிப்படையில் வெள் ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு 29 நாட் களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் விலகிக் கொள்ளப்பட்டது. இரவு சிப்ட் முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புகின்றனர். பேச்சுவார்த்தையில் என்டிபிஎல் நிர்வா கத் தரப்பில் நெய்வேலியில் இருந்து  தலைமை பொதுமேலாளர் (மனிதவளம்) பங்கஜ்குமார், தலைமை பொது  தொழில் நல்லுறவு அதிகாரி திருக்குமார், என்டிபிஎல் பொது மேலாளர் (மனிதவளம்) சரவணன், பொதுமேலாளர் (இயக்குதல்) அரவிந்த் குமார், துணைப் பொதுமேலாளர்கள் சங்கர், பாலாஜி, தொழிலாளர் மண்டல ஆணை யர் நடுவன் பிரவீன் பாண்டியன் ஆகி யோரும், தொழிற்சங்கத் தரப்பில் சிஐடியு என் டிபிஎல் செயலாளர் அப்பாதுரை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல், மாவட்டத் தலை வர் பேச்சிமுத்து, நிர்வாகிகள் மணிகண்டன், குணசீலன், தமிழ்ச்செல்வன், குரு பாஸ்கர், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அன்பழகன், எல்பிஎப் செயலாளர் முத்து ராஜ், நிர்வாகிகள் முத்துசாமி, இமாம் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.