திண்டுக்கல்-நத்தம் சாலையில் விபத்து தடுப்பு அமைத்திடுக!
வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்
திண்டுக்கல், ஆக.16- திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள விபத்துப்பகுதி களைக் கண்டறிந்து அந்த இடத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்புகளை அமைத்திட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டுக்கல் ஒன்றிய மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள வாலிபர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் ஜோன்சன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பிரேம்குமார் துவக்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் அசோக்சுந்தரம் எதிர்கால பணிகள் குறித்து பேசினார். மாவட்டச்செயலாளர் கே.முகேஷ் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெ டுக்கப்பட்டது. ஒன்றியத் தலைவர் ஜோன்சன், செயலா ளராக அசோக்சுந்தரம், பொருளாளராக சிவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.