tamilnadu

img

தேனியில் சுதந்திர தினம் கோலாகலம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியேற்றினார்

சிதம்பரம் வீனஸ் பள்ளியில்  சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சிதம்பரம், ஆக.16- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி யின் நிறுவனர் வீனஸ் எஸ்.குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தின ராக ஹேவிட் நிறுவனத்தின் அதிகாரி மாரியப்பன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ரூபியாள்ராணி, பள்ளியின் முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ்போனிக்கலா மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அதேபோல், தேரடி தெரு வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மருத்துவர் முருகன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பள்ளி யின் முதல்வர் பெஸ்கிராவ் உள்ளிட்ட ஆசிரி யர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை, வக்கார மாரி பகுதியிலுள்ள வீனஸ் குழுமப் பள்ளிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.