தவிடு எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் அமைக்க அரசு மானியம்
தஞ்சாவூர், ஆக.16 - தவிடு எண்ணெய் தயாரிக்கும் அலகு, மானிய விலையில் அமைக்க வேளாண் விற்பனை மற்றும் வணி கத் துறையை அணுக லாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை யின் துணை இயக்குநர் ஆர்.சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெல் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில், தவிடு எண்ணெய் தயா ரிக்கும் அலகு அமைப்ப தற்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. நெல் தவிடு எண்ணெய் தயாரிக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் கள், வேளாண் விற் பனை மற்றும் வணிகத் துறை, துணை இயக்கு நர் அலுவலக தொலை பேசி எண்-04362-256628 தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் உயர் மருத்துவ பரிசோதனை
அரியலூர், ஆக.16 - அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றார் ஆட்சியர் பொ.ரத்தினசாமி. சுதந்திர தினத்தையொட்டி, அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அப்போது அவர், “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், உயர் மருத்துவ பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து பயன்பெறலாம்” என்றார். இதே போல், கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி செயலர் பா.குமாரி தலைமை வகித்தார். வாலாஜா நகரத்தில், ஊராட்சி செயலர் மு.தமிழ்குமரன், தாமரைக்குளத்தில், ஊராட்சி செயலர் முத்து, ஓட்டகோவிலில் அழகுவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தின் பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் கலந்து கொண்டார்.