tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டில் மராத்வாடா மற்றும் விதர்பாவில் 2,635 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகளின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு புதிய கொள்கையை கொண்டு வர வேண்டும்.

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

30% பெண் வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக ஒன்றிய அரசிலும், மாநில அரசுகளிலும் நியமிக்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் 30% பெண்கள் சட்ட ஆலோசகர்களாக பணி அமர்த்தப்பட வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

எல்லா மாநிலங்களிலும் தாய் மொழிதான் முதல் மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலாவது இரண்டாவது மொழி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பல மாநிலங்களில் இரண்டாவது மொழியான ஆங்கிலத்தை கற்பிக்க முயல்வதில்லை. இதில் மூன்றாவது மொழி வேறு.\

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

உலகில் மிக மோசமான கெட்ட பழக்கம் என்றால் அது லோன் வாங்குவதுதான். குடிப்பழக்கம் இருந்தால் தனிப்பட்ட நபருக்குதான் பாதிப்பு. ஆனால் கடன் உங்களையும் சுற்றியுள்ள உறவுகளையும் கடுமையாக பாதிக்கும். கார், பங்களாவைவிட அலாரம் வைக்காமல் நிம்மதியாகத் தூங்கி எழும் வாழ்க்கையே ஆடம்பரமானது.