மதுரை, ஜூன் 10- மதுரை மாவட்டத்தில் 300 ககும் மேற்பட்ட மேடை இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் இசைத்தொழிலை நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம். ஆனால் தற்பொழுது நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவல் ஊர டங்கு காரணமாக கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்ச்சி கள் அனைத்து ரத்தாகி உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளது. எங்களது இசைக் கச்சேரிகள் வருடத்தில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மட்டுமே கோவில் திருவிழா மற்றும் மண்ட பங்களில் நடைபெறும். இந்த 4 மாத வருமானத்தை வைத்துதான் எங்கள் குடும்ப தேவைகள் அனை த்தும் பூர்த்தி செய்து வருகிறோம். மேலும் அனைத்து தொழிலி லும் அரசு தளர்வு கொடுத்தது போல் எங்களது தொழில் நடக்க வும் வழி வகை செய்ய கோவில் கள் மற்றும் திருமண மண்டபங்க ளில் இசை நிகழ்ச்சி நடத்திட சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்களின் சங்க நிர்வாகி கள் ஜே.பி விஜய், எஸ்.மதியழ கன், ஜி.சுந்தர் மற்றும் உறுப்பி னர்கள் மதுரை மாவட்ட ஆட்சிய ரிடம் புதனன்று மனு அளித்தார் கள்.