tamilnadu

தீபாவளி வாழ்த்து கூறிய டிரம்ப்புக்கு மோடி நன்றி வரி வர்த்தகம் உறவுகள் குறித்து மீண்டும் மவுனம்

தீபாவளி வாழ்த்து  கூறிய டிரம்ப்புக்கு மோடி நன்றி வரி, வர்த்தகம் உறவுகள் குறித்து மீண்டும் மவுனம்!

புதுதில்லி, அக். 22 - தீபாவளி வாழ்த்து கூறிய தற்காக டிரம்ப்பிற்கு, நன்றி தெரி வித்துள்ள பிரதமர் மோடி, வர்த்தக விவகாரம் குறித்து வழக்கம் போல, எதுவும் தெளிவுபடத் தெரிவிக்கா மல் ‘மவுனம்’ காத்துள்ளார். அக்டோபர் 21 அன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அதுபற்றி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டி ருந்தார். அதில், ‘நாங்கள் நிறைய விஷ யங்களைப் பற்றி பேசினோம், பெரும்பாலும் வர்த்தக உலகம் பற்றி பேசினோம். அவர் (மோடி) ரஷ்யாவிலிருந்து இனி அதிகம் எண்ணெய் வாங்கப் போவ தில்லை. என்னைப் போலவே அந்த  (ரஷ்ய - உக்ரைன்) போர் முடிவடை வதையே அவரும் காண விரும்பு கிறார்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப், தீபாவளி அன்று தனக்கு தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததை உறுதிப்படுத்தி, அதற்கு நன்றி தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி,  இருப்பினும், ரஷ்ய எண்ணெய் விவகாரம், வரிகள் மற்றும் வர்த்தகம் போன்ற பிரச்சனைகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிட வில்லை. ‘ஜனாதிபதி டிரம்ப், உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான தீபாவளி வாழ்த்துக் களுக்கு நன்றி. இந்த தீபத் திரு நாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் நம்பிக்கை யுடன் உலகை ஒளிரச் செய்யட்டும் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து  ஒற்றுமையாக நிற்கட்டும்’ என்று கூறியதோடு மோடி நிறுத்திக் கொண்டுள்ளார். வர்த்தகம், வரி விதிப்பு, எச்1பி  விசா, ரஷ்யா எண்ணெய் கொள் முதல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக வழக்கம்போல வாய் திறக்காமல் மவுனத்தை கடைப்பிடித்துள்ளார்.