மோடி அரசின் வக்பு திருத்தச் சட்டப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முக்கிய உத்தரவு
புதுதில்லி, செப். 15 - அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய பாஜக கொண்டு வந்த, வக்பு திருத்தச் சட்டத்தின் பல ஆட்சேபகரமான விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. குறிப்பாக, வக்பு என அறி விக்கப்பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஆட் சியரின் அதிகாரம் அதிரடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் வக்பு திருத்தச் சட்டத்தை, மோடி அரசு நிறைவேற்றியது. உடனுக்குடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை யும் பெற்று, 2025 ஏப்ரல் 8 அன்று வக்பு திருத்தச் சட்டத்தை அம லுக்கும் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, சமாஜ் வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் என 75 மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, அன்றைய தலை மை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி கள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வ நாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தாம் விரைவில் ஓய்வு பெறவிருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என்பதால், புதிய தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார் என்று சஞ்சீவ் கன்னா அறிவித்தனார். அதன்படி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதி பதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகி யோர் கொண்ட அமர்வு 2025 மே மாதம் இந்த வழக்குகளை விசா ரித்தது. மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி வாதங் களை வைத்தனர். இந்த வாதங் களைக் கேட்ட உச்சநீதிமன்றம், வழ க்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், திங்களன்று இந்த வழக்குகள் மீண்டும் விசார ணைக்கு வந்தபோது, முழு சட்ட த்திற்கும் தடை விதிக்க மறுத்து விட்டாலும், சில அதிரடியான இடைக்கால உத்தரவுகளை தலை மை நீதிபதி பி.ஆர். கவாய் தலை மையிலான அமர்வு பிறப்பித்துள்ளது. வக்பு ஒன்றை உருவாக்க ஒரு வர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மத த்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கு தடை விதிக்கப்பட்டுள் ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகளை மாநில அரசாங்கங்கள் வகுக்கும் வரை, உச்சநீதிமன்றத்தின் தடை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கபட்டதாகக் அர சாங்கத்தால் கூறப்படும் நிலங்கள் தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப் படும் வரை, அந்த நிலத்தை வக்பு நிலமாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கான விதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வக்பு என அறிவிக்கப் பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவு களைப் பிறப்பிக்கும் ஆட்சியரின் அதிகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள் ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க அனுமதிப்பது, அதி காரப் பிரிவினைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக் கிறது. வக்பு நிலத்தின் உரிமை குறித்து தீர்ப்பாயம் அல்லது நீதி மன்றம் முடிவு செய்யும் வரை, சம்ப ந்தப்பட்ட நிலம் வக்பு நிலமாகவே கருதப்படும். அதே நேரத்தில், சர்ச்சை தீர்க்கப்படும் வரை அந்த நிலங்களில் எந்த மூன்றாம் தரப்பு உரிமைகளையும் உருவாக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர் களின் எண்ணிக்கை நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர் களின் எண்ணிக்கை மூன்றுக்கு மிகா மல் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, மத்திய வக்பு கவுன் சிலில், 22 உறுப்பினர்களில் 4 முஸ் லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதே போல, திருத்தப்பட்ட வக்பு சட்டம் பிரிவு 14-இன் கீழ் அமைக்கப் பட்ட வாரியத்தில், 11 உறுப்பினர் களில் 3 முஸ்லிம் அல்லாத உறுப்பி னர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் அல்லாதவர் மாநில வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் படலாம் என்ற விதியில் உச்ச நீதி மன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பிக்காவிட்டாலும், “முடிந்தவரை, ஒரு முஸ்லிம் நபர் நியமிக்கப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதுமுள்ள வக்பு வாரியச் சொத்துக்களை சூறையாடும், பாஜக அரசின் சூழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை முக்கியமான அடியாக அமைந்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அரசு ஆராயும் : கிரண் ரிஜிஜூ
(திருத்த) சட்டத்தின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறித்து, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மும்பையில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “வக்பு சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அரசின் அனைத்து அம்சங்களையும் நோக்கங்களையும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் வலுவாக முன்வைத்தார். நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் சவால் விட முடியாது. சட்டத்தின் சில விதிகளை சவால் செய்யலாம். இந்த அம்சத்தில் உச்ச நீதிமன்றம் முத்திரை பதித்துள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், “உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும் நமது அமைப்புகள் மீதான நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒரு நல்ல அறிகுறி. உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ள விதிகள் குறித்து அரசு ஆராயும். என்ன செய்ய முடியும் என்பது குறித்து நாங்கள் பார்ப்போம்” என்று ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.