tamilnadu

img

‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதத்திலும் பதிலளிக்காத மோடி அரசு

‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதத்திலும் பதிலளிக்காத மோடி அரசு

5 பயங்கரவாதிகள் நாட்டிற்குள் எவ்வாறு ஊடுருவினார்கள்?

புதுதில்லி, ஜூலை 28 - ‘ஆபரேசன் சிந்தூர்’ தொடர் பான 16 மணிநேர விவாதம் நாடாளு மன்றத்தில், திங்களன்று பிற்பகல் துவங்கிய நிலையில், “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேர், நாட்டிற்குள் எவ்வாறு ஊடுரு வினார்கள், 26 சுற்றுலாப் பய ணிகளைக் கொன்று குவித்து விட்டு,  எவ்வாறு சாவகாசமாக தப்பித் தார்கள், என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்த எந்த கேள்விக்கும் ஒன்றிய பாஜக அரசு பதிலளிக்க வில்லை. ‘இந்தியா’ கூட்டணி கட்சி களின் தொடர் போராட்டங்களின் காரண மாக, ஒருவழியாக, ‘ஆபரேசன் சிந்தூர்’ பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மோடி அரசு ஒப்புக் கொண்டது. இந்த விவாதத்தை, மக்களவையில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார். ‘ஆபரேசன் சிந்தூர்’ ஓயவில்லை,   ஒத்தியே வைத்துள்ளோம்! அப்போது, “வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே மேற்கொள்ளப்  பட்ட ஆபரேசன் சிந்தூர் நட வடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள 7 பெரிய முகாம்கள் உட்பட 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் அழித்தது” என்று தெரிவித்தார். “இந்த நடவடிக்கை பதற்றத் தைத் தூண்டாத, கவனமாக திட்ட மிடப்பட்ட மற்றும் துல்லியமாக செயல்படுத்தப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை போன்ற தாக்குதல். அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப் படாமல், பயங்கரவாத உள்கட்ட மைப்பிற்கு அதிகபட்ச சேதத்தை நமது படைகள் உறுதி செய்தன; இந்த நடவடிக்கையில் இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை; இந்திய ராணுவத் தளவாடங்களுக்கு எந்த சேத மும் ஏற்படவில்லை. பாகிஸ் தானால் இந்தியாவின் எந்த ஒரு இடத்தையும் தகர்க்க முடிய வில்லை. அதேநேரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட அழிவுக்கான உறுதியான ஆதாரங்கள் இந்தியாவிடம் இருக்கின்றன” என்றார். டிரம்ப் அழுத்தத்தால் மோதலை நிறுத்தவில்லை “ஆபரேசன் சிந்தூர் அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டது என்று நம்புவது தவறு மற்றும் ஆதாரமற்றது. பாகிஸ்தான் மீதான தாக்குதலை எந்த (அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்) அழுத்தத்தாலும் நிறுத்தவில்லை.. நான் பொய் சொல்லவில்லை.. நோக்கம் நிறை வேறியதால் தான் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தினோம்” என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர,  முற்றிலும் முடிவுக்கு வர வில்லை!” என்று குறிப்பிட்ட ராஜ்நாத்  சிங், “எதிர்காலத்தில் பாகிஸ்தானி டமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மீண்டும் ‘ஆபரேசன் சிந்தூர்’ தொடரும்” என்றும் தெரி வித்தார். “பாகிஸ்தான் விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று எதிர்க்கட்சிகள் ஒருமுறை கூட  கேட்கவில்லை” என்று ஆவேசப் பட்ட ராஜ்நாத் சிங், “நீங்கள் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றால், ‘ஆபரேசன் சிந்தூர்’

வெற்றிகரமாக இருந்ததா என்று கேளுங்கள், அதற்கு எங்கள் பதில் ஆமாம் என்பது தான்,” என்றார். பயங்கரவாதிகளை ஊடுருவ விட்டது யார்? ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தைத் துவக்கி வைத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசினர். காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பேசுகையில், “ராஜ்நாத் சிங் நீண்ட  நெடிய உரையை வழங்கினார். இவையெல்லாம் ஒன்றிய அரசு தரப்பில் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் இருப்பவை தான். ஆனால், இந்திய மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, 5 பயங்கரவாதிகள் நாட்டுக்குள் எப்படி ஊடுருவினார்கள்? என்பதைத் தான். அதுபற்றி ராஜ்நாத் சிங் ஒருவார்த்தை கூட பேசவில்லை” என்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். சண்டை நிறுத்தம் திடீரென ஏற்பட்டது எப்படி? “ஆபரேசன் சிந்தூரின் போது, மொத்த நாடும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருந்தன. ஆனால், சண்டை நிறுத்தம் திடீரென அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் சொல்வது போல,  பாகிஸ்தான் பணிந்து போகத் தயாராக இருந்திருந்தால், ஏன் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். யாரிடம் நீங்கள் சரண டைந்தீர்கள் என்றும் சொல்ல வேண்டும்” என்றார். பஹல்காம் சம்பவத்திற்கு அமித் ஷாவே பொறுப்பு குறிப்பாக, “பஹல்காம் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.  ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது. ஏனென்றால், ஜம்மு -  காஷ்மீர் பாதுகாப்பாக உள்ளது என்று அமித் ஷா அறிவித்த பிறகு தான், ஊரி மற்றும் பாலகோட் தாக்குதல்  நடைபெற்றது. தற்போது பஹல் காம் தாக்குதலும் நடைபெற்றுள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), திமுக, இடதுசாரிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்தைத் தொடர்ந்தனர்.