விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூர் கிராமத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மக்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர், பட்டாசு தொழிலாளர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறினார். திமுக நிர்வாகிகள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.