மாதர் சங்க மாநில மாநாடு - மார்த்தாண்டத்தில் நாளை பேரணி
குழித்துறை, செப். 22 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத் தில் செப்டம்பர் 24 முதல் 27 வரை நடைபெறுகிறது. புதனன்று (செப்.24) பல்லாயிரக்கணக் கான பெண்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் மாநாடு தொடங்குகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி.கே. ஸ்ரீமதி, துணைத் தலைவர்கள் உ. வாசுகி, சுதா சுந்தரராமன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதுதொடர்பாக குழித்துறையில் திங்களன்று மாநில பொதுச்செயலாளர் அ. ராதிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெண்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சிறப்பு சட்டமன்ற அமர்வை நடத்த வேண்டும்; சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதித் திட்டத்திற்கு முழு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், நகர்ப்புற வேலையுறுதித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாதர் சங்க மாநாட்டில், தமிழகம் முழு வதும் இருந்து 580 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் எனவும்; பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனை களை மாநாடு விரிவாக விவாதிக்கும் எனவும் தெரிவித்தார்.