மதுரை, ஏப்.18-மதுரை நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து70 ஆயிரம் பேர்; பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர்என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 133 பேரும். மூன்றாம் பாலினத்தவர் 79 பேர் உள்ளனர்.மதுரை நாடாளுமன்ற மொத்ததொகுதியும் தேர்தல் ஆணையத்தால் 163 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொகுதி முழுவதும் 517 வாக்குச்சாவடிகளில் 1549 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றில் 444 வாக்குமையங்கள் பதட்டமுள்ளவையாகவும், 2 மிகப் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டது. பதட்டமான அனைத்து வாக்கு மையங்களிலும் தேவையான பாதுகாப்பு முன் னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.வாக்குப் பதிவுகளைக் கண்காணிக்கும் வகையில் 962 வெப்கேமராக்கள் அமைக்கப்பட்டிருந் தது. 148 மைக்ரோ அப்சர்வர்களும் 2500க்கும் மேற்பட்ட அயல் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வயதானவர்கள் வாக்களிக்கத் தேவையான வீல் சேர்கள், இவர்களுக்கு உதவ 1600 தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மாசி வீதிகளில் உள்ள 18 வாக்குச் சாவடிகளில் 51 வாக்குப்பதிவு மையங்களும், அழகர் எதிர்சேவை பகுதிகளில் 15 இடங்களில் உள்ள 53 வாக்குப் பதிவுமையங்கள் அமைக்கப்பட்டிருந் தன. மேலும் மக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய இடங்களில் போதுமான மருத்துவக் குழுக்கள் . அதேபோன்று 108 ஆம்புலன்ஸ்கள்வசதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில வாக்கு பதிவு மையங்களில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டன. தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் முத்துச்சாமி நாடார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றதால் வாக்குப் பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக நடைபெற்றது.மதுரையில் சித்திரை திருவிழாநடைபெறுவதால் 6 மணிக்கு நிறைவு பெற வேண்டிய வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப் பட்டு 8 மணிக்கு நிறைவு பெற்றது.வாக்கு பதிவு எந்த அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்றது, மாலை 5 மணி நிலவரப்படி 8 லட்சத்து 82 ஆயிரத்து349 வாக்குகள் பதிவாகியிருந்தனர்.இது 57.36 சதவீதமாகும்.மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகபூப்பாளையம் அன்சாரிநகர் பகுதியில் உள்ள சிட்டி நடுநிலைப் பள்ளியில் புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையுடன் தங்களுடைய ஜனநாயக கடமையினையாற்றும் வகையில் வந்து வாக்களித்தார்கள்.