tamilnadu

போலீஸ் விசாரணைக்கு வராமல் ஓடி ஒளியும் மதுரை ஆதீனம்!

போலீஸ் விசாரணைக்கு வராமல் ஓடி ஒளியும் மதுரை ஆதீனம்!

2-ஆவது நாளாக ஆஜராகவில்லை

சென்னை, ஜூலை 5 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்தைக் காட்டி, தன்னைச் சிலர் கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் கூறியிருந்தார். விபத்தையொட்டி செய்தியா ளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், குல்லா அணிந்து, தாடி வைத்திருந்த (முஸ்லிம்) கார் ஓட்டுநர், நம்பர் பிளேட் இல்லாத வாகனம் மூலம் திட்டமிட்டு தனது கார் மீது மோதி கொலை செய்ய முயன்றதாக கூறினார். ஆனால், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆதீனத்தின் கார் தான் மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற் படுத்தியது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இரு சமூகங்களுக்கு இடையே மோத லை ஏற்படுத்த ஆதீனம் முயற்சிப்ப தாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், போலீ சில் புகார் கொடுத்தார்.  இதனடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மதுரை ஆதீனம், விசாரணைக்கு நேரில் ஆஜராக வும் போலீசார் சம்மன் அனுப்பி னர். ஆனால் ஆதீனம் ஆஜராக வில்லை. விசாரணைக்கு காணொளி முறையில் ஆஜராவ தாக மதுரை ஆதீனம் கூறியதை காவல்துறை ஏற்கவில்லை.  அதனடிப்படையில் விசார ணைக்கு சனிக்கிழமை (ஜூலை 5) ஆஜராகுமாறு, 2-ஆவது முறை யான ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறையும் நேரில் ஆஜராகாத ஆதீனம், மடத்தின் செயலாளர் செல்வகுமாரை விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளார். வயது முதிர்வு காரணமாக மதுரை ஆதீனத்தால் காவல் நிலை யம் வர முடியவில்லை எனவும், ஆஜர் ஆக சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் மடத்தின் செயலாளர் செல்வகுமார் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.