states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

யூடியூபர் துருவ் ரதி 

நரேந்திர மோடி, அதானியை பாதுகாப்பதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் நலன்களை இது பாதிக்கிறது. உங்களின் தனிப்பட்ட ஆதாயங்களை விட நாட்டின் நலன்கள் முக்கியம்.

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்

சாவா மற்றும் காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படங்கள், மக்களை வலதுசாரி அரசியல் நோக்கி திருப்பும் முனைப்புடன் எடுக்கப்படுகின்றன. இந்த படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைப்பது எனக்கு அச்சத்தை தருகிறது. மக்களை திசைதிருப்பும் இத்தகைய படங்களை போல்  என்றுமே நான் நடிக்க மாட்டேன்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையை முன்னெடுத்த பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு தனியார் தொலைக்காட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. அந்த தொலைக்காட்சி குழுமத்தை சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியிருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை அந்த தொலைக்காட்சிதான் ஒளிபரப்பவிருக்கிறது. அந்த போட்டிக்கு யார் வர்ணனை செய்வார்கள் என புரிகிறதா?

இயக்குநர் ஹன்சல் மேத்தா

தெருநாய்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விடுங்கள். வாக்காளர் பட்டியலில் அவையும் இடம்பெறக் கூடும்.