states

குஜராத் பாஜக தலைவர் பீகாரில் வாக்காளர்

குஜராத் பாஜக தலைவர் பீகாரில் வாக்காளர்

தேஜஸ்வி கடும்  விமர்சனம்

குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த பாஜக தலைவரை சில மாதத்தி லேயே பீகாரில் வாக்காளராக இணைத்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியா ளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி, பீகார் மாநில பாஜக கமிட்டியின் பொறுப்பாள ராக இருக்கும் பிக்குபாய் தல்சானியா என்ற பாஜக தலைவர் குஜராத் மாநி லத்தைச் சேர்ந்தவர். அவர் கடைசியாக 2024 தேர்தலின் போது குஜராத்தில் தான் தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். அதன்பிறகு குஜராத் வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்கி தற்போது பீகாரில் வாக்கா ளராக மாறியிருக்கிறார். ஐந்து ஆண்டு கள் கூட நிறைவடையாத நிலையில், ஒருவர் சட்டவிரோதமாக இடத்தை மாற்றி  வாக்களிப்பது எப்படி சாத்தியம்?  பீகார் தேர்தல் முடிந்த பிறகு, இங்கி ருந்தும் தனது பெயரை நீக்கிக்கொண்டு அவர் எங்கு செல்வார்? இதன் பின்னணி யில் உள்ள சதியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணை யத்துடன் கைகோர்த்துக்கொண்டு பாஜக மிகப் பெரிய அளவில் நேர்மையற்ற முறையில் செயல்பட்டு வருகிறது’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.