மதுரை:
தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் பயணிகள்ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரைநாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி 11 அன்று தை அமாவாசைஆகும். இந்துக்கள் தங்களது மூதாதையர்களுக்கு காசி, இராமேஸ்வரம்போன்ற புண்ணியஸ்தலங்களில் திதி கொடுப்பது வழக்கம். கொரோனா காலத்திற்கு முன்பு மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு இரண்டு விரைவு ரயில்கள் உடன் மூன்று சாதாரண கட்டண ரயில்கள் காலை 6.45, காலை 12.45 மற்றும் மாலை 6.10 மணிக்கு எனஇயக்கப்பட்டது. ஆடி அமாவாசைமற்றும் மாகாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ காலங்களில் சிறப்பு வண்டிகள் இயக்கப்பட்டு ரயில்பய ணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.
பேருந்தில் செல்ல வேண்டு மெனில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்சென்று அங்கிருந்து இராமேஸ்வரம்செல்ல ரூ.120-க்கு மேல் செலவாகும். ஆனால் பயணிகள் ரயில் கட்டணம் ரூ.45, விரைவு ரயில் கட்டணம் ரூ.85 மட்டுமே.மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு நேரடி பயணிகள் ரயில்கள் தற்போது இல்லை. இராமேஸ்வரத்தில் இப்போது புனிதநீராட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் பயனடையும் படி ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் மதுரை கோட்டச் செயலாளர் ரா.சங்கரநாராயணன் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.