எல்ஐசி, முகவர்களை பாதுகாக்க கூட்டு நடவடிக்கை
ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
எல்ஐசி மற்றும் முகவர்களை பாது காக்க கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்து போராட்டங்களை நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ), அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்), எல்ஐசி இந்திய காப்பீட்டு முகவர்கள் களின் ஆலோசனைக் கூட்டம் திங்க ளன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏஐஐஇஏ தலை வர் வி.ரமேஷ், தென் மண்டல நிர்வாகி கள் கோபிகுமார், எஸ்.ரமேஷ்குமார், கிரிதர், லிகாய் தலைவர் சுஜித்குமார், பொதுச் செயலாளர் பி.ஜி.திலிப், தென்மண்டல தலைவர் பெல்லார்மின், பொதுச் செயலாளர் சுதாகர், தமிழ்நாடு மாநிலத் தலைவர் பூவலிங்கம், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், லியாபி தலைவர் சுக்லா, பொதுச் செயலாளர் சயானி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இந்தக் கூட்டத்தில் பேசிய ஏஐஐஇஏ தலைவர் வி.ரமேஷ், “அரசின் கொள்கை முடிவு, நிர்வாக முடிவுகள் என இரண்டு வகையாக பிரச்சனைகளை அணுக வேண்டும்.
அரசின் கொள்கை முடிவு களை எதிர்த்து போராடுவதோடு முக வர்களையும் பாதுகாக்க வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்கள் காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. தற்போது அரசு, எல்ஐசியில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அறிவித்துள்ளது. நிர்வாகம், பாலிசி தாரர் தொடர்ந்து பணம் (பிரீமியம்) செலுத்தவில்லை என்றால் முகவர் களுக்கு கொடுத்த கமிஷன் தொகையை திரும்பப் பெறுவது என்று முடிவெடுக் கிறது. விபத்து, வாகனக் காப்பீடு என தனித்தனியாக முகவர்கள் உள்ளனர். ஒரே முகவர் அனைத்து வகையான பாலிசிகளையும் சேகரிக்கும் வகை யில் லைசென்ஸ் வழங்க உள்ளனர். இவற்றையெல்லாம் எதிர்த்து வலுவாக போராட வேண்டும். எல்ஐசியில் ஊழியர்கள், முகவர்கள் மட்டுமின்றி வளர்ச்சி அதிகாரிகள், அதி காரிகள் உள்ளடக்கிய 30 சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றை முழுமை யாக இணைத்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும். அதன் வாயி லாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஹைதராபாத்தில் அனைத்து சங்கங்களை கொண்ட கூட்டம் நடத்தி, கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.