இன்றே வாழ்வின் இறுதி நாளென அறிந்தால்
கோவிலுக்கு செல்கிறார்கள்,
பிடித்த மழையில் நனைகிறார்கள்,
திரைப்படத்திற்கு செல்கிறார்கள்,
பூங்காக்களுக்கு
செல்கிறார்கள்,
தான தர்மங்கள் செய்கிறார்கள்,
விலகியிருப்பவர்களிடம்
நட்பாய்
சேர்ந்து நடக்கிறார்கள்,
அக்கம் பக்கத்தினரிடம்
அன்பை பொழிகிறார்கள்,
பிடித்த
பயணம் செய்கிறார்கள்,
நேசித்தவர்களை பார்க்கச்செல்கிறார்கள்,
தாம் செய்த தவறுகளுக்காய்
வருந்துகிறார்கள்,
இறுதி நாளென்பது
ஆரம்பித்து வைக்கிறது..வாழ்வை!
- மு.முபாரக்