இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குறிச்சி கிராம மக்கள் மனு
மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரோட்டு தெரு காலனி மக்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் இல்லாததால், வீட்டுமனை பட்டா கேட்டு, ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகாவிடம், பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை புகார் மனு கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லாத நிலையில் வியாழனன்று குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுமனை பட்டா கேட்டு ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகாவிடம் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், குறிச்சி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கேட்டுக் கொண்டனர். அதனடிப்படையில் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி சேதமடைந்து அப்புறப்படுத்தி 3 வருடங்கள் ஆகியும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டாததால் அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதையும், மேலும், முறையான சாலை வசதி இல்லாமல் உள்ளதையும் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.