tamilnadu

கோட்டூர்புரம் விசாரணை கைதி மரணம் எஸ்.ஐ. மற்றும் 2 தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் சிறை!

கோட்டூர்புரம் விசாரணை கைதி மரணம்எஸ்.ஐ. மற்றும் 2 தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் சிறை!

சென்னை, செப். 24 - விசாரணையின் போது, கைதியை அடித்துக் கொன்ற வழக்கில் கோட்டூர் புரம் காவல்துறையினர் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டு, குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவரை விசார ணைக்கு அழைத்துச் சென்ற கோட்டூர் புரம் போலீசார் அவரை கொடூரமாக தாக்கினர்.  பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பழனி சிறிது நேரத்தில் மரணமடைந் தார். இதுதொடர்பாக பழனியின் தந்தை ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில் காவல்துறையினரின் தாக்குதல் தான் மரணத்திற்கு கார ணம் என நிரூபணமானது. இதையடுத்து, சென்னை அல்லிக் குளம் 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி. பாண்டியராஜ் வழங்கிய தீர்ப்பில், கோட்டூர்புரம் எஸ்.ஐ. பி. ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்பிரமணியன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.