சென்னை, ஜன. 13 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து ளார். தனித்துவமும் தொடர்ந்து மின்னிடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கை யின் சிறப்பைப் போற்றும் விழா. தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா. விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் விழா. உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா. அமைதி, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழகத்தை இந்திய அள வில் முன்னணி மாநிலமாக மாற்றி வரு கிறது இந்த அரசு. ஒற்றுமையோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றி ணைந்து நிற்கும் வரை தமிழகத்தின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும்” என்றும் தெரிவித்திருக்கிறார். “‘உழவே தலை’ என உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத் துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா. அதை மிகுந்த மகிழ்ச்சி யோடு, உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் செல்வப் பெருந்தகை தெரிவித்திருக் கிறார். மநு தர்மத்தை ஒழிப்போம் சமய வேறுபாடுகளையும், சனா தனக் கருத்தியலால் கட்டமைக்கப் பட்ட படிநிலை சாதிய சமூக வேறுபாடு களையும் பயன்படுத்தி, மதவெறி ஆதிக்க சக்திகள் அரசியல் அதி காரத்தில் தொடரும் பேராபத்தை உணர்ந்து, அதை அதிகாரத்திலிருந்து, சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற தைத் திருநாளில் உறுதி ஏற்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். உலகத்தாருக்கு அச்சாணி என வள்ளுவப் பெருந்தகையின் வர்ணி க்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வில் எண்ணற்ற இன்னல்கள் சூழ்ந்து விட்டது. நீர்நிலைகள், ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. நீர்வரத்து பாதிக்கப்பட்டு விட்டது. இந்தத் துய ரத்தில் இருந்து விவசாயிகள் விடுபட வேண்டும் என்று மதிமுக பொதுச்செய லாளர் வைகோ கூறியிருக்கிறார். விசிக தலைவர் தொல். திருமா வளவன், பாமக நிறுவனர் இராமதாஸ் உள்ளிட்ட பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.