மயிலாடுதுறை, பிப்.3 - ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள், பாரம்பரிய பெருமைக்குரிய அடை யாளங்கள் நிறைந்த மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக புவிசார் குறியீடு பெற்ற கொள்ளிடம் தைக்கால் பிரம்பிற்கு மற்றுமொரு மகுடமாக அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜன.29 முதல் பிப்.1 வரை TANAPEX-2025, அஞ்சல்தலை கண்காட்சி தமிழ்நாடு அஞ்சல் வட்டத் தில் நடைபெற்றது. சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலை வர் மரியம்மா தாமஸ், தமிழ்நாடு முதன்மை செயலாளர் முருகானந்தம் மற்றும் மத்திய மண்டலத் தலைவர் நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்ற னர். விழாவின் ஒரு அங்கமாக, புவிசார் குறியீடு பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு கைவினைப் பொருட் களுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளி யிடப்பட்டது. இந்த சிறப்பு அஞ்சல் உறையை மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத் தலைவர் ஆசிஃப் இஃபால் பெற்றுக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கொள்ளிடம் தைக்கால் பகுதியில், மூங்கில் பிரம்பு களைப் பயன்படுத்தி, நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில் போன்ற கை வினைப் பொருட்களை பல தலை முறைகளாக செய்து வருகின்றனர். பாரம்பரிய உற்பத்தி தொழிலாகவும், குடிசை தொழிலாகவும் மாறி இப்பகுதி களில் வசிப்போரின் வாழ்வாதார தொழி லாக மாறிவிட்ட தைக்கால் பிரம்பிற்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தைக்கால் பிரம்பிற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ள தற்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, மயி லாடுதுறை மாவட்ட மக்கள் என அனைத் துத் தரப்பினரும் நன்றி தெரிவித்து வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.