tamilnadu

img

தமிழ்நாட்டு தேர்வர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை

தமிழ்நாட்டு தேர்வர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை

சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் மதுரை, ஜூலை 27- தமிழ்நாட்டு தேர்வர்களை வஞ்சிக்கும் ஒன்றிய  அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) பொறுப்பற்ற நடவடிக்கைக்கு மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணை யம் பல அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும்  அலுவலகங்களில் உள்ள 2,423 காலியிடங்களை  நிரப்புவதற்கான விளம்பர எண். Phase-XIII/2025/Selection Posts-ஐ வெளியிட்டது. ஆன்-லைன் விண்ணப்பங்களைப் பெறுவ தற்கான கடைசி தேதி மற்றும் நேரம் ஜூன் 23, 2025 (23:00 மணி நேரம் வரை) என்று தரப்பட்டி ருந்தது. கணினி அடிப்படையிலான தேர்வுக்கான தேதிகளும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஜூலை 24 அன்று தொடங்கி ஆகஸ்ட் 4  வரையில் நடக்கும் என்று உத்தேசமாக அறிவிக்கப் பட்டிருந்தது.  விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தேதியில் தேர்வு தொடங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்ச மாகும். ஆனால் தேர்வு நடத்தும் முறை நாடு முழு வதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச்  செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில்  தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்ப தாரர்கள் பின்வரும் கருத்துகளை தெரிவித்தனர். 1. விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள், அவர்கள் தங்கியிருந்த இடத்தி லிருந்து வெகு தொலைவில் இருந்தன. நுழைவுச் சீட்டுகளை ஜூலை 21, 2025 அன்றுதான் வெளியிட்டார்கள். மேலும், இந்த வெளியீடுகூட அனைத்து நாட்களுக்குமானதாக இல்லை. தேர்வுக்கு குறைந்தது நான்கு நாட்களுக்கு முன்பு தான் நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்று அறி வித்துள்ளார்கள். அதாவது ஆகஸ்ட் 1, 2025 அன்று எழுதவிருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.  2. தேர்வு மையத்திற்கு 100 கி.மீ.க்கு மேல் பயணம் செய்த பிறகு, பல்வேறு மையங்களில், தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக வாயில்களில் அறிவிப்பைக் கண்டு விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மையத்தில், அறிவிப்புகள் ஒவ்வொன்றாக ஒட்டப்பட்டபோது அது நகைப்புக்குரியதாக மாறி யது. இறுதியாக, ஜூலை 24 முதல் ஜூலை 26 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இந்த நிச்சயமற்ற தன்மை தேர்வர்களுக்கு மிகுந்த மன உளைச் சலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில்  நடைபெறும் தேர்வுகளை சந்திக்க உள்ளவர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு பயணிக்கத் தயங்கு வதால், நேரம் மற்றும் ஆற்றல் வீணாகிவிடும் என்ற  அச்சத்தில் உள்ளனர். 3. விளம்பரத்தில் போதிய எண்ணிக்கையி லான மையங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால்  அந்த மையங்கள் பலவற்றில் தேர்வு நடத்தப்பட வில்லை என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கோயம் புத்தூர் போன்ற முக்கியமான மையங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஒரு பெருநகர மான சென்னையில் கூட, ஒரே ஒரு தேர்வு மையம்  மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக போதுமானதாக இல்லை. மையங்கள் வெகு தொலைவில் இருப்பதால் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிலர் தேர்வில் கலந்து கொள்ள மூன்று நாட்கள் செலவிட வேண்டியிருக்கிறது. 4. தேர்வு அறைகளுக்குள், கணினிகள் சரியாக  வேலை செய்யவில்லை. சில தேர்வர்கள் விடை எழுதும்போது தங்கள் கணினிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள் வேறொரு கணினியில் அமர்த்தப்பட்டனர். பல கணினிகளில் மவுஸ் வேலை செய்யவில்லை. தேர்வு அறைகள் பெரும்பாலும் கணினி ஆய்வ கங்களாக உள்ளதால் மூடப்பட்டதாகவே இருக்கும்.  சில தேர்வு அறைகளில், குளிர்சாதன வசதி வேலை  செய்யவில்லை. இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் இது கோடைக்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 5. நுழையும் இடத்தில் தேவைப்படும் நடை முறை மற்றும் தேர்வு மையத்திற்குள் செய்ய வேண்டியவை ஒழுங்கற்ற முறையில் கையாளப் பட்டுள்ளன. சில அரங்குகளில் கதவு மூடப்பட வேண்டிய நேரம் என்று அறிவித்திருந்த நேர மான காலை 9 மணிக்குப் பிறகுதான் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வு  அரங்கிற்குள் அலைபேசிகள் தடை செய்யப்பட்ட வையாகும். ஆனால், தேர்வு அரங்கின் உள்ளி ருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியில் பகிரப் பட்டுள்ளன. மேலும் சிலர் தாங்கள் தேர்வு எழுதும் கணினியின் திரையைப் பகிர்ந்திருக்கிறார்கள்.  6. தேர்வுகளை நடத்துவதற்குப் பொறுப் பேற்றுள்ள நிறுவனம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, டாடா கன்சல்டன்சி நிறு வனம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் தேர்வுகளை நடத்தி வந்தது. இப்போது எடுக்விட்டி(Eduquity) என்ற புதிய நிறுவனத்திற்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தைச் செய்யும் அதே வேளையில், தேர்வுகளை சீராக நடத்துவதை உறுதி செய்வ தில் பணியாளர் தேர்வு ஆணையம் தோல்வி யடைந்துள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள வேலையற்ற இளைஞர்கள் தேவையற்ற சிர மத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் தேர்வர்கள் நலன் சார்பாக முன்வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால், 1. தேர்வுகள் மீண்டும் திட்டமிடப்படுவதால், எஞ்சியுள்ள தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். “நிர்வாகக் காரணங்கள்” அல்லது “தொழில்நுட்பக் கோளாறுகள்” போன்ற வற்றைச் சொல்வது எதற்கும் பயனளிக்காது. 2. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மையங்களில் இருந்தும், தேர்வர் களுக்கு அருகாமையில் உள்ள மையங்களை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.  3. பெரிய நகரங்களில், அதாவது சென்னை யில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும். 4. எதிர்காலத்திலாவது நுழைவுச் சீட்டுகள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும்.  5. தேர்வுகளை நடத்தும் பணியை ஒதுக்கும் நிறு வனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, மாற்றத் தின் போது ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு  தெளிவான செயல்முறையை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.