tamilnadu

img

தமிழகம் முழுவதும் அரசு சுற்றுலா பேருந்துகள் விரிவுபடுத்தப்படும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி

தமிழகம் முழுவதும் அரசு  சுற்றுலா பேருந்துகள் விரிவுபடுத்தப்படும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி

அரியலூர், பிப்.11 - தமிழகம் முழுவதும் அரசு சுற்றுலா பேருந்துகள் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜெமீன் தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தத்தனூர் குடிகாடு கிராமத்தில் செவ்வா யன்று மகளிர் விடியல் பயண பேருந்து சேவையை தமிழக போக்குவரத்து துறை  அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  தொடர்ந்து சித்தமல்லியில் அவர் செய்தி யாளர்களிடம் தெரிவிக்கையில், “ஒவ்வொரு  ஆண்டும் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ப வர்களின் எண்ணிக்கையும், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நடப்பு ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது  பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சமாகும். அதற்கான பணி களை போக்குவரத்துத் துறை பணியாளர் கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற் கொண்ட னர். அரசுப் பேருந்துகளின் மீது மக்களின் நம்பிக்கை அதி கரித்துள்ளதால் முன்பதிவு செய்து  பயணிப் பவர்களின் எண் ணிக்கை உயர்ந் துள்ளது. மேலும் போக்குவரத்துத் துறை பொது மக்களின் எதிர் பார்ப்பை மிகச் சிறப்பாக பூர்த்தி  செய்து வருகிறது. கும்பகோ ணம் நவக்கிரக தலங்களுக்கு தனிப்  பேருந்து மிகச் சிறப்பாக இயக்கப்பட்டு வரு கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து பொது மக்கள் அப்பேருந்தில் பயணம் செய்து தங்க ளின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். சென்னையில் சுற்றுலாத் தளங்களை பொதுமக்கள் பார்க்கும் வகையில் மாநகர  போக்குவரத்து கழகத்தின் சார்பில் வின்டேஜ்  பேருந்துகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பேருந்துகளை போல வடிவ மைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களை குறிப்பாக அருங்காட்சியகம், மெரினா கடற் கரை உள்ளிட்ட இடங்களை எல்லாம் ஒருங்கி ணைத்து சுற்றுவட்ட பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இப்பேருந்துகள் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளன. தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில்  சுற்றுலா பேருந்துகள் தொடர்ந்து விரிவு படுத்தப்படும். பேருந்துகள் விபத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அதனை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விபத்து களை தவிர்ப்பதற்கு பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது” என்றார்.