tamilnadu

img

மதுரை மாவட்டத்தில் விளைபொருட்களை இலவசமாக சேமிப்பு கிட்டங்கிகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.... தமிழக அரசு அறிவிப்பு

மதுரை 
மதுரை மாவட்டம் வேளாண் விற்பனை குழு மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்படும் விற்பனை குழுவின் கீழ் மதுரை மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம்,  உசிலம்பட்டி,  தே.கல்லுப்பட்டி, வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சேமித்துவைக்க 11 ஆயிரத்து 226 மெட்ரிக் டன் அளவிற்க்கான இடவசதி உள்ளது அதில் 5 ஆயிரத்து 957.42 டன் உணவு பொருட்கள் தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 5 ஆயிரத்து 268.58 மெட்ரிக் டன் வரை சேர்த்துவைக்க இடம் காலியாக உள்ளது. இதுவரை ரூபாய் 2 கோடியே 6 லட்சம் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய - மாநில அரசுகள் பிறப்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறபித்துள்ள நிலையில். தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய இயலாத காரணத்தினால். தமிழக அரசு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கட்டணம் ஏதுமின்றி சேமித்து வைத்துக்கொள்ளாம் என்று அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சேமித்து வைத்துக் கொள்ளவும். 

விவசாயிகள் தங்களது விளை பொருட்களை வைத்து கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 25 மெட்ரிக் டன் அளவிலான குளிர்சாதன தானியக் கிடங்கு செயல்படுகிறது அங்கிருந்து தற்போது  10 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் மற்றும் பயறு வகைகள் கட்டணம் ஏதுமின்றி விவசாயிகளால் சேமித்து வைத்து. தினசரி விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

திருமங்கலம் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் குளிர்சாதன கிடங்கிற்கு அனைத்து விதமான விளைபொருட்களையும் கட்டணமின்றி ஊரடங்கு முடியும் வரை சேமித்து வைத்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்க விரும்பும் விவசாயிகள் மதுரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளின் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது மதுரை - 9677550210, உசிலம்பட்டி - 989462282, திருமங்கலம் - 8110054595, வாடிப்பட்டி - 9600802823 ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் செய்தி வெளியிட்டுள்ளார்.