tamilnadu

img

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புவதா?

சென்னை, ஜன. 13 - முதல்வரை குறிப்பிட்டு அவ தூறு பரப்பும் ஆளுநர் ரவி, நாகரி கத்தோடு நடந்து கொள்ளத் தெரி யாவிட்டால் தமிழகத்தைவிட்டு வெளியேறிக் கொள்ளவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டமாக குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்ப  தாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய ‘எக்ஸ்’ பதிவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.  ஸ்டாலினை, அவரது முத லமைச்சர் பதவியை குறிப்பிடாமல் ஒரு தனி மனிதராக பாவித்து ஒரு  பதிவிட்டுள்ளார். இது கடும் கண்ட னத்துக்குரியதாகும். தமிழ்நாட்டின் மரபின்படி தான் நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாட முடியுமென்று சொன்னதை, ‘தேசிய கீதமே பாட முடியாது’ என்று சொன்னதாக புரளி கிளப்பு கிறார். நாளை வருகிற இன் னொரு ஆளுநர் இன்னொரு நேரம் பாட வேண்டுமென்று கேட்டால் அப்படி செய்ய முடியுமா? மேலும், ‘இத னால் அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். அவர்கள் தத்துவமே அப்படித் தான்’ என்று பதிவிடுவது எல்லாம் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பாணி திசைதிருப்பல் வேலையே.  ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‘திராவிட மாதிரி என்று எதுவும் இல்லை,  திராவிடத் தத்துவம் காலாவதி யாகிவிட்டது’ என்று ஒரு நாளி தழுக்கு கொடுத்த பேட்டியை முதன் மைப்படுத்தி வைத்திருக்கும் அளவிற்கு ஆளுநர் ரவி அத்துமீறி நடந்து கொள்பவர் என்பதையும் அதைப் பெருமையாக கருதிக் கொண்டிருப்பவர் என்பதையும் காண முடிகிறது.  ஆளுநராக நியமிக்கப்பட் டாலே வானளாவிய அதிகாரம் இருப்பதாக கருதிக் கொண்டு அடாவடி செய்வதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத் தையும் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் சங்பரிவாரம் ஏற்கவோ மதிக்கவோ மாட்டோம் என்று சொன்னதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. எனவே, ஆளுநர் அடுத்தவர் களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு, தான் குறைந்தபட்சம் பொறுப்புணர்வோடும் நாகரீகத் தோடும் நடந்து கொள்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டு மென்றும் அவருக்கு அத்தகைய குணமில்லை எனில் அவர் தமிழ கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.