tamilnadu

img

ஓசூரில் வாலிபர் சங்க மாநாட்டு வரவேற்பு குழு பணி நிறைவு பாராட்டு விழா

ஓசூரில் வாலிபர் சங்க மாநாட்டு வரவேற்பு குழு  பணி நிறைவு பாராட்டு விழா

கிருஷ்ணகிரி, அக்.31 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடை பெற்றது. இந்த மாநாட்டின் வரவேற்பு குழு பணி நிறைவு பாராட்டு விழா ஓசூரில் வரவேற்பு குழு தலைவர் ஆர்.சேகர் தலை மையிலும், வரவேற்பு குழு கவுரவ தலைவர் பி.நாகராஜ்ரெட்டி முன்னிலையிலும் நடை பெற்றது. செயலாளர் கே.இளவரசன் வர வேற்றார். மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்து கண்ணன், மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் சி.சுரேஷ், வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ், நடராஜன், லெனின் முருகன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் இருதயராஜ், ஸ்ரீதர், மூத்த தலை வர் டி.எஸ்.பாண்டியன், இளந்தலைவர் புருஷோத்தமரெட்டி, வட்ட மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஓசூர் தேவராஜ், கெலமங்கலம் ராஜா, கிருஷ்ணகிரி பெரிய சாமி, பர்கூர் சீனிவாசன், போச்சம்பள்ளி சாமு, சூளகிரி முருகன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநாட்டிற்காக அயராது உழைத்த விளம்பரம், மண்டபங்கள் பராமரிப்பு, நிதி, ஊடகக்குழு, குறிப்பாக உணவு குழு தலைவர் புருஷோத்தமரெட்டி உள்ளிட்ட அனைத்து மாநாட்டு பணிக்குழுக்களுக்கும் பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது. வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எம்பி ஏ.ஏ.ரஹீம், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜெய்சிக் தாமஸ் மற்றும் தமிழகம் தழுவிய தலைவர்கள், பிரதி நிதிகள் தங்குவதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக கவனித்துக் கொண்ட மாடன் பர்னிச்சர் கணேசன் உள்ளிட்ட தோழர்கள் பாராட்டப்பட்டனர். மாநாட்டை ஒட்டி ஓசூரில் நடைபெற்ற இளைஞர்களின் ரத்ததான முகாம், செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளம் பெண்க ளுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவற்றிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, நீதியரசர் சந்துரு கலந்துகொண்டு தற்போதைய பாஜக ஒன்றிய அரசின் கீழ் ஜனநாயகத்தின் மீதும், நீதிபதிகள், நீதிமன்றங்கள், நீதி ஆகியவை மீது நடத்தப்படும் பாசிச தாக்குதல்கள் குறித்து எழுச்சியுடன் உரை யாற்றியதற்கும், அவரின் எழுச்சி உரையை புத்தகமாக எழுதி வெளியிட்டதற்கும் மூத்த முற்போக்கு எழுத்தாளர் கமலால யன் பாராட்டப்பட்டார். வரவேற்பு குழு பொருளாளர் நாகேஷ்பாபு நன்றி தெரி வித்தார்.