மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை 95,000 ஏக்கர் சம்பா நடவு பயிர்கள் நீரில் முழ்கின உரிய நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
மயிலாடுதுறை, அக். 23- மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி, கொள்ளிடம், செம்பனார் கோவில், குத்தாலம், மயிலாடுதுறை, மணல்மேடு, தரங்கம்பாடி, திருக்கடை யூர் என மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் நடவு செய்யப்பட்டும், விதை தெளித்தும் பயிரிடப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை யால் சுமார் 95,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வருகிறது. மேலும், நல்லாடை கிராமத்தில் நண்ட லாற்றில் கடைமடை பகுதியை நோக்கி பல்வேறு இடங்களில் இருந்து வரும் ஆற்று வெள்ள நீர் ஒவ்வொரு ஆண்டும் வயல்களில் உட்புகுந்து தேங்கி நிற்பதால் சுமார் 700 ஏக்கரில் நடவு மற்றும் விதைப்பு செய்த சம்பா நெற்பயிர்கள் அழுகி விடும் அபா யத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு மூலம் வேளாண்மை துறையினர் நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றும், வேதனை தெரிவித்த விவசாயிகள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ள சம்பா நெற்பயிர்களை எடுத்துக் காண்பித்து வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து நல்லாடை பகுதி விவ சாயிகள் ராமு, செல்வம், பாலகுரு, மாணிக்கவேல் ஆகியோர் கூறுகை யில், “நண்டலாற்று வெள்ள நீரால் விவ சாய நிலங்கள் மூழ்கி ஏரி போல் காட்சி யளிக்கின்றன. ஏக்கருக்கு ரூபாய் ரூ.40,000 வரை செலவு செய்து நெற் பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளதால் இளம் நெற்பயிர் அழுகி விடும் அபாயத்தில் உள்ளது. அரசு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் நல்லாடை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி ஊராட்சிப் பகுதிகளில் பயிர் சேதம் ஏற்படுவது தொடர் கதையாகி விட்டது. கடந்த முறை பயிர் சேதத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் இந்த முறையும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. விவசாயத் தொழில் தொடர்ச்சியாக லாபம் இல்லாமல் உள்ளது. வங்கியில் கடன் பெற்றும் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. செலவு செய்த பணத்தை எடுத்தாலே போதும் என்ற நிலைக்கு விவசாயிகளின் வாழ்வா தாரம் கேள்வி குறியாகி விட்டது. விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு காண நண்டலாறு கரையை உயர்த்தி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கவலையில் விவசாயிகள் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற் பயிர்கள் பயிரிடப்பட்ட நிலையில், 95,000 ஏக்கர் நடவு பயிர்களும் தொடர் கனமழையால் மூழ்கி அழுகி வரு கிறது. குறிப்பாக மயிலாடுதுறை வில்லி யநல்லூர், செம்பனார்கோவில் நல்லா டை பகுதியில் விவசாய நிலங்கள் குளம்போல காட்சியளிக்கிறது. பருவ மழை தொடக்க நிலையிலேயே பாதிப்பு கள் கடுமையாக உள்ளதால் விவ சாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விவசாயம் கேள்வி குறியாகி வருவதை அரசு கவனத்து டன் கையாண்டு பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கு வதோடு, வடிகால் வாய்க்கால்களை முழுவதுமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்திள்ளார்.
கும்பகோணம் அருகே 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
கும்பகோணம் அருகே 50 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்தில் சமீபத்தில் பெய்த மழையால் இயந்திரம் மூலம் நடவு செய்யப்பட்ட பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. குறிப்பாக கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் மழைநீரில் மூழ்கியுள்ளது. மண்ணியாற்றிலிருந்து பிரியும் அத்தியூரான் வாய்க்கால் கொத்தங்குடி, மணல்மேடு, தேவானஞ்சேரி, இணைபிரியாள் வட்டம், அத்தியூர் ஆகிய கிராமங்களில் சுமார் 192 ஏக்கர் பாசன வசதி கொண்டது ஆகும். இந்த வாய்க்கால் திருப்புறம்பியம் மதகுலிருந்து புது வாய்க்கால் வழியாக வருகிறது. இந்த வாய்க்கால் முழுவதும் ஆகாய தாமரை, நாணல் போன்ற செடி கொடிகள் படர்ந்து மழைநீர் வடியாமல் தேங்கி விவசாய நிலங்கள் முற்றிலும் மூழ்கியுள்ளன. பலமுறை சம்மந்தப்பட்ட செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தும் வாய்க்கால் தூர்வராப்படவில்லை. இந்நிலையில், நீரில் மூழ்கிய பயிரைக் காப்பாற்ற விவசாயிகளின் நலன் கருதி கொத்தங்குடி புதுவாய்க்கால், அத்தியூரான் வாய்க்காலை தூர்வாரி வடிகால் வசதி செய்துதரவும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பயிர்களை விவசாய தொழிலாளர் சங்கம் மாநிலக் குழு உறுப்பினர் சி.நாகராஜன் மற்றும் விவசாயிகளுடன் நேரில் பார்வையிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.