அடுத்த 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
சென்னை, அக். 22- தமிழகத்தில் அக்டோபர் 28 வரை அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்ற ழுத்தத் தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கிடையே நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழக, புதுவை, தெற்கு ஆந்திர கடலோரப்பகுதி களைக் கடந்து நகர்ந்து செல்லக் கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல, தென்கிழக்கு அர பிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதனன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வியாழக்கிழமை (அக். 23) அன்று, சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வெள்ளிக் கிழமை (அக். 24) அன்று கட லூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை யில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! அக்டோபர் 23, 24 ஆகிய தேதி களில் வட தமிழக கடலோரப் பகு திகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி கள் மற்றும் புதுவையில் சூறாவ ளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். இதேபோல தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத் திலும் வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறி வுறுத்தப்பட்டுள்ளது.