சுமைப்பணித் தொழிலாளர்கள் மாபெரும் பேரணி
தமிழ்நாடு சுமைப்பணித் தொழிலாளர் சம்மேளனத்தின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக திங்களன்று மாலை நடைபெற்ற கோரிக்கை முழக்க பேரணியில் பல்லாயிரக்கணக்கான சுமைப்பணித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சம்மேளனத் தலைவர் ஆர்.வெங்கடபதி, பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார், பொருளாளர் பி.குமார் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.