கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் அழிக்கவொண்ணா தடம் பதித்தவர்
“மார்க்சிய சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலும் பிடிப்பும் கொண்டு, ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்டாக தனது வாழ்நாள் முழு வதும் திகழ்ந்த தோழர் யெச்சூ அவர்க ளின் திடீர் மறைவு இந்திய நாட்டின் இடதுசாரி இயக்கங்களுக்கும் தோ ழர்களுக்கும் மிகப்பெரம் துயரையும், இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை யும் ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் பாசிச மற்றும் மத வெறி சக்திகளுக்கு எதிரான போராட் டத்தில், இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்ததில், தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் பங்கு என்றும் நினைவுகூரத்தக்கது. இந்திய கம்யூனிச வரலாற்றில், அழிக்கவொ ண்ணா தடம் பதித்த அந்த ஒப்பற்றத் தோ ழருக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.கே) தனது செங்கொடி தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகின்றது” - ஐக்கிய கம்யூ. கட்சி மாநிலச் செயலாளர் எஸ்.பாஸ்கரன்
உழைப்பாளி மக்களுக்கு ஈடற்ற பேரிழப்பு!
“1974-இல் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு, முழுநேரக் கட்சி உறுப்பினராக- அர சியல் தலைமைக்குழு உறுப்பினராக- அகில இந்திய பொதுச்செயலா ளராக என பல்வேறு பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றியவர் சீத்தா ராம் யெச்சூரி. மாநிலங்களைவை உறுப்பினராக 12 ஆண்டுகாலம் இந்திய நாட்டு உழைப்பாளி மக்களின் மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தவர். மதவாத, பிளவுவாத சக்திகளின் விஷமக் கருத்துககளை சித்தாந்த ரீதியாக மக்ள் மத்தியில் அம்பலப்படுத்தியவர். அவரது மறைவு, உழைப் பாளி மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாருக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் செவ்வஞ்சலியை உரித்தாக்குகிறோம். சிஐடியு சங்கங்கள் ஒருவாரம் செங்கொடிகளைத் தாழ்த்தி இரங்கல் தெரிவிக்கிறது”. -சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன்
யெச்சூரியின் பங்களிப்பு எப்போதும் நினைக்கப்படும்!
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். முற்போக்கு அரசியலில் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்”. - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்