சென்னை, ஜன. 13 - உழவர்கள், உழைப்பு, இயற்கையை பொங்கல் திருநாளாகக் கொண்டாடும் உல கெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
அறுவடைத் திருநாளின் வரலாற்று வடிவம்
புவிப் பரப்பெங்கும் விரிந்து, பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறோம். உலகமெங்கும் அறு வடையின் துவக்கம் பல்வேறு வடிவங்களில் விழாக்களாக கொண்டாடப்படுகின்றன. உழவை, உழவர்களை, உழைப்பை, இயற்கை யைக் கொண்டாடுகிற விழாவாக பொங்கல் திருநாள் தமிழ் மக்களால் வரலாற்றுக் காலந் தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏர்முனையை போர்முனைக்கு தள்ளும் ஆட்சியாளர்கள்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று பேசும் திருக்குறள் “உழவே தலை” என்று உழவுத் தொழிலை தலைமேல் வைத்து கொண்டாடுகிறது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு வேளாண் திருத்த சட்டங்கள் மூலம் உழவுத் தொழிலை கார்ப்பரேட் முதலாளி களுக்கு கைமாற்றி விட முயன்றதை எதிர்த்து ‘ஏர் முனை’ நடத்திய ‘போர் முனை’யால் இந்திய விவசாயம் தற்காலிகமாக காப்பாற்றப் பட்ட போதும், இன்னமும் அந்த ஆபத்து நீங்கி விடவில்லை. விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான பரந்துபட்ட போராட்டங்களை பல முனை களில் தொடர்ந்து நடத்திட வேண்டியுள்ளது.
பொதுவுடமைச் சமூகம் சமூக உறுதியேற்போம்!
உலகின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாள் சமத்துவப் பொங்கலாகவே கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், இனம் கடந்து மக்களின் ஒற்றுமையைப் பறை சாற்றுவதாக பொங்கல் திருநாள் விளங்கு கிறது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற பொதுவுடைமை சமூகத்தை சமைத்திட, இந்த பொங்கல் திருநாளில் உறுதியேற்போம். வண்ணங்கள் இணைகிற போதுதான் வாசலில் போடப்படுகிற கோலம் அழகா கிறது. அதேபோல பல்வேறு மதங்களை பின்பற்றுகிற, பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு பண்பாடுகளை கொண்டுள்ள பன்முகத்தன்மையே இந்தியாவின் பேரழ காகும். ஆனால் இந்த பன்முகத்தன்மையை அழித்து ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனத் துவங்கி இப்போது ஒரு நாடு, ஒரே தேர்தல் என்கிற அளவுக்கு செல்கிறது ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் இயக்கப்படும் ஒன்றிய அரசு. இத்தகைய சதித்திட்டங்களை முறியடித்து இந்திய மக்களின் ஒற்றுமை யையும், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளின் மகத்தான கடமைகளில் ஒன்றாக முன் நிற்கிறது.
கார்ப்பரேட் லாபவெறிக்கு பலியாகும் பல்லுயிர் தலங்கள்
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற திருக்குறள் உணவை பகிர்ந்துண்பது குறித்து மட்டும் பேசவில்லை. உலகின் பல்லுயிர் பெருக்கத்தையும், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டி யதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. ஆனால் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அரிட்டாபட்டி பகுதியில் பல்லுயிர் பகுதியை அழித்து, பண்பாட்டுச் சின்னங்களை சிதைத்து, கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாபவெறிக்கு விருந்தாக்க முயன்ற ஒன்றிய அரசை எதிர்த்து, மக்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் நம்பிக்கை கொள்ள வைக்கின்றன.
மநு அதர்ம அழுக்கை அரசியல் சட்டமாக்க சதி
இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலாக விளைந்த மதச்சார்பற்ற, ஜன நாயக, கூட்டாட்சிக் கருத்தியலை அடிப்படை யாகக் கொண்ட நம்நாட்டின் அரசியல் சட்டத்தை அகற்றி விட்டு, அந்த இடத்தில் பிறப்பால் பேதம் கற்பிக்கிற மநு அதர்மம் உள்ளிட்ட கடந்தகால அழுக்குகளை இந்தியாவின் அரசியல் சட்ட மாக மாற்ற ஒன்றிய பாஜக கூட்டணி ஆட்சி முயல்வதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. நல்வாழ்விற்கான வழிகளை புதிய ‘தை’ திறக்கட்டும் வெப்பம் அதிகரிக்கும் போது உலைப் பானை கொதிப்பதை போல கொடுமைகளை எதிர்த்து கொதித்தெழும் மக்கள் போராட்டங் கள் வெடித்தே தீரும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. பிறந்திருக்கும் தை அனைத்துப் பகுதி மக்களின் நல்வாழ் விற்கான வழிகளை திறந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கு கிறோம். இவ்வாறு பெ. சண்முகம் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.