ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் மழலைகளுக்கு பட்டமளிப்பு விழா
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலை மாணவர்களுக்கான பட்ட மளிப்பு விழா வியாழக்கிழமை நடை பெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மகப்பேறு மருத்துவர் ஜெய லெட்சமி, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம். செந்தில்குமார் ஆகியோர் மழலை மாண வர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்த னர். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, பள்ளியின் இயக்குநர் சுதர்சன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக யுகேஜி மாணவி விதக்ஷிதா வர வேற்க, மாணவர் முகமது ரோஹான் நன்றி கூறினார்.
மருதம்பள்ளம் அரசு பள்ளியில் விழா
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், மருதம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்திணிய விழா கொண்டாடப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசி ரியர்களுக்கு பாராட்டு விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா, முதல் வகுப்பு மாண வர்களுக்கு பட்டமளிப்பு விழா, முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வர வேற்பு விழா என ஐந்திணிய விழாவாக கிராமப்புற மக்களை கவரும் விதமாகவும், சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் கொண் டாடப்பட்டது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் இரா.புனிதவதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பா.செந்தமிழ்செல்வி வர வேற்று பேசினார். முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர் நந்தினி ஸ்ரீதர், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் மாண வர்களின் பெற்றோர்கள், கிராம மக்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
பொது வெளியில் மாற்றுத்திறனாளி களை கொச்சைப்படுத்திப் பேசிய மாநில நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனை கண்டித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ.ரகுமான் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நகரச் செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.