tamilnadu

தொழில் உரிமங்களை வழங்க ஊராட்சிகளுக்கு அதிகாரம்! அரசாணை வெளியீடு

தொழில் உரிமங்களை வழங்க ஊராட்சிகளுக்கு அதிகாரம்! அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 28 - தொழில் உரிமம் வழங்குவது தொடர்பாக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சிகளைப் போன்று கிராமப்புற உள்ளாட்சிகளிலும் விதிகளை உருவாக்கி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின்படி, கிராம ஊராட்சிகளில் தொழில் உரிமங்களை வழங்குவது கிராம ஊராட்சித் தலைவரின் அதிகாரம் ஆகும். ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டுமென்றால், ஊராட்சி ஒன்றியக் குழுவின் அனுமதி மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையரின் அனுமதி பெற வேண்டும். உரிமக் கட்டணம் அந்தந்த ஊராட்சியில் செலுத்தப்பட வேண்டும். உரிய படிவத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து, தேவையான ஆவணங்களுடன் உரிமக் கட்டணம் செலுத்தினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிமம் வழங்குவார்கள்.