சிவகங்கை:
மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சிவகங்கை மாவட்ட மின்வாரியக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்விற்கு மண்டலச் செயலாளர் உமாநாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருணாநிதி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன்,மாநிலத் துணைத் தலைவர்கள் கோகுலவர்மன், ராமச் சந்திரன், கோட்டச் செயலாளர் சொர்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் சுப்புராம், சிஐடியு மாவட்டச் செயலாளர் வீரையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைப்பின் மூத்த முன்னோடிகள் தணக்கன், விநாயகமூர்த்தி, அழகர் சாமி, ஒ.போஸ், எஸ்.ராஜேந்திரன், செல்லம், பொன்.ராஜசேகரன், அகஸ்டின், குத்தாலிங்கம், முத்துராமலிங்கம், எம்.போஸ், முத்துகிருஷ்ணன், வேலாயுதம்,உடையான், மதியழகன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், “தமிழக மின்வாரியத்தில் 23 ஆயிரம் கள உதவியாளர்கள், 8206 வயர்மேன், 3,452 கணக்கீட்டாளர் பதவிகள், 1,467 உதவிப் பொறியாளர் பணியிடங்கள், 1,200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் 1,300இளநிலை பணியிடங்கள் என மொத்தம் 52 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன.
காலிப்பணியிடங்களை அவுட்
சோர்சிங் விடுவதற்கு அரசு முயற்சித்தது. மின் ஊழியர் போராட்டத்தால் அவுட்சோர்சிங் முறை கைவிடப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 7-க்குவாங்குகிறார்கள். இதே அதானி கம்பெனி குஜராத் மாநிலத்தில் ஒருயூனிட் மின்சாரத்தை குஜராத் அரசிற்குரூ.3-க்கு வழங்குகிறது. காலிப் பணியிடங்களை நிரப்ப மறுக்கும் தமிழக அரசுகூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தைவாங்கி அதை மக்கள் தலையில் கட்டுகிறது. மின்வாரியப் பணிகளை மாவட்டஅளவில் மின்வாரிய கண்காணிப்பாளர் பொறுப்பில் மாதம் ரூ.75 லட்சத்திற்கு டெண்டர் விடுவதற்கு முடிவுசெய்து அந்தப் பணியை தொடங்கிஇருக்கிறார்கள். இதை எதிர்த்து பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள2,674 பிரிவு அலுவலகங்கள், 564 வட்ட அலுவலகங்கள், 179 செயற்பொறியாளர் அலுவலகங்கள், 674 சப்-டிவிஷன் அலுவலகங்களில் காலை-மதிய இடைவேளையில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட் டத்தில் காண்ட்ராக்ட் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து வேலையில்லாஇளைஞர்களுக்கு வேலை வழங்கவேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்துவர்.இவ்வாறு அவர் கூறினார்.