tamilnadu

img

அரசு ஊழியர் சங்க நாகை வட்டப் பேரவை

அரசு ஊழியர் சங்க நாகை வட்டப் பேரவை 

நாகப்பட்டினம், செப். 28- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் வட்டப் பேரவை சனிக்கிழமை வட்டத் தலைவர் வே.சித்ரா தலைமையில் நடைபெற்றது.  வட்ட துணைத் தலைவர் கே.ராம்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ப. அந்துவன் சேரல் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் வேலை அறிக்கையையும், வட்டப் பொருளாளர் பி.ரமேஷ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கா. ராஜு, சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கணேசன், தொழிற்பயிற்சி அலுவலர், சங்க தலைவர் ஆர்.வெங்கடேசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.