விரைவில் கூகுள் டுவோ சேவை நிறுத்தம்!
வரும் செப்டம்பர் மாதம் முதல் கூகுள் டுவோ (Google Duo) சேவை முழுமையாக நிறுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் டுவோ செயலி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பயனர்கள் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், வீடியோ மெசேஜ்களை அனுப்பவும் உதவுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு, இந்த செயலியை கூகுள் மீட் (Google Meet) உடன் இணைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு கூகுள் டுவோ கூகுள் மீட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், கூகுள் டுவோ செயலி கூகுள் மீட்டாக upgrade செய்யப்பட்டு வருகிறது. அப்கிரேட் செய்யப்பட்ட கூகுள் மீட் செயலியில், ஃபேமிலி மோட் (Family Mode), மொமண்ட்ஸ் (Moments), Knock Knock உள்ளிட்ட கூகுள் டுவோவின் சில அம்சங்கள் வழங்கப்படவில்லை. எனினும், live captions, screen sharing, raise your hand, stackable effects, cloud encryption உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூகுள் மீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், வரும் செப்டம்பர் மாதம் முதல் கூகுள் டுவோ (Google Duo) சேவை முழுமையாக நிறுத்தப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் டுவோவில் உங்கள் வீடியோ அழைப்புகளின் வரலாறு மற்றும் வீடியோ செய்திகளை export செய்து சேமித்துக்கொள்ளவும் கூகுள் பரிந்துரைத்துள்ளது.
ஃபோன் பேட்டரி விரைவாக தீர இன்ஸ்டாகிராம் காரணமா?
இன்ஸ்டாகிராம் செயலியால் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுவதாகவும் இன்ஸ்டாகிராம் செயலியின் புதிய பதிப்பில் இந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, இன்ஸ்டாகிராம் பயன்படுத்து வதன் காரணமாக ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுவதாக ஆண்ட்ராய்டு பயனர்கள் புகார் தெரி வித்து வருகின்றனர். இப்பிரச்சனை குறித்து மெட்டா தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், இது குறித்து கூகுள் நிறுவனம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்ட்ராய்டு சாதனங்களில் பேட்டரி குறைபாட்டை சரிசெய்யும் புதிய பதிப்பான இன்ஸ்டாகிராம் பில்ட் 382.0.0.49.84 மே 28 அன்று இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளதாகவும், இந்த பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்தால் பேட்டரி பிரச்சனை சரி ஆகிவிடும் என கூகுள் தெரிவித்துள்ளது. பேட்டரி குறைபாடு பிரச்சனையால் எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் பாதிக்கப்பட்டன என்பதை கூகுள் குறிப்பிடவில்லை என்றாலும், கூகுளின் அனைத்து Pixel சாதனங்களும் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஐபேட்களுக்கான வாட்ஸ் அப் செயலி அறிமுகம்!
நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபேட்களுக்கான வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஐபேட்களில், வாட்ஸ் அப் வெப்புக்கு சென்றே வாட்ஸ் அப் சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், இனி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஃபோன்களில் இருப்பதை போலவே, ஐபேட்களுக்கும் வாட்ஸ் அப் செயலியை மெட்ட நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி ஆப் ஸ்டோரில் தற்போது கிடைக்கிறது. புதிய ஐபேட் செயலியில், 32 பங்கேற்பாளர்கள் வரை வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை பங்கேற்க முடியும். இதில், வீடியோ அழைப்புகளின் போது திரைப் பகிர்வும் செய்ய முடியும்.