இன்று பொது வேலை நிறுத்தம், மறியல்: ஆதரித்து, விளக்கி பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, பிப்.11 - மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத, விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண் டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற் றும் ஐக்கிய விவசாயி கள் முன்னணி சார்பில் வியாழனன்று அகில இந்திய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறு கிறது. திருச்சியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிஆர்இயு திருச்சி கோட்டம் சார்பில் தென்னக ரயில்வே கோட்ட அலுவலக வளாகத்தில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ராஜா முன்னிலை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலைவர் மணிமாறன், டிஆர்இயு கோட்டச் செய லாளர் கரிகாலன், உதவி கோட்டத் தலைவர் காசிவிஸ்வலிங்கம், உதவி கோட்டச் செயலாளர்கள் தனபால், ரஜினி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தலைமை கிளை உதவி செயலா ளர் நன்றி கூறினார். ஒர்க்ஷாப் டிவிஷன் டிஆர்இயு பொன்மலை ஒர்க்ஷாப் டிவிஷன் சார்பில் புதனன்று பொன் மலை ஆக்மரிகேட் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு கோட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் சந்தனசெல்வம், துணை கோட்டச் செயலாளர் சங்கர், டிஆர்பியு தலைவர் மனோகரன் ஆகி யோர் பேசினர். டிஆர்பியு நிர்வாகிகள் மகேந்திரன், சவுந்தர்ராஜன், தயாநிதி கணேசன் மற்றும் டிஆர்இயு-வினர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர், பிப்.11 - பொது வேலை நிறுத்தப் போராட் டத்தை விளக்கி, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் தொழிற்சங்கங் கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில், சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால், ஐக்கிய விவ சாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.வி.கண்ணன், தொமுச மாவட்டச் செயலாளர் கு. சேவியர், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் துரை.மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், ஹெச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ராஜன், தொழிற்சங்க நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பிப்.11 - வேலை நிறுத்தம் மறியல் போராட் டத்திற்கு அழைப்பு விடுத்து திருவிடை மருதூர் கடைவீதியில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கூட்ட மைப்பு சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை விளக்கி மாவட்டத் தலைவர் ஜெயபால், ஐஎன்டியுசி சந்திரசேகர், வாசுதேவன், விசிக நகரச் செயலாளர் அருமைதுரை, மாவட்ட பொருளாளர் செல்வம், ஏஐ டியுசி மணிமூர்த்தி, சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க மாநிலச் செயலாளர் நாகேந்திரன், சிஐடியு நெச வாளர் சங்க பொறுப்பாளர்கள் சேது, சுப்ரமணியன் பக்கிரிசாமி, பரசுராமன், தரைக்கடை வியாபாரிகள் சங்க ஜெயச்சந்திரன், மாதர் சங்கம் அம்ச வள்ளி, ஓய்வூதியர் சங்கம் நீலமேகம் கலந்து கொண்டனர். பின்னர் திருபுவனம், திருவிடை மருதூர், ஆடுதுறை, அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம் கடைவீதியில் பிரச்சாரம் நடைபெற்றது.
