மதுரை:
தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங் களுக்கு தமிழ் தெரியாத நீதிபதிகளை நியமனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தமிழ் தெரிந்த நீதிபதிகளையே மாவட்ட கீழமை நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்க வேண்டும்.புதுச்சேரி, கேரளம்,ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இளம் வழக்கறிஞர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அதேபோல் தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்றம்முன்பு செவ்வாயன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மாவட்டத் தலைவர் சுப்புராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலப்பொதுச் செயலாளர் எம்.முத்து அமுதநாதன், மதுரை வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் மோகன்குமார், மாவட்டச் செயலாளர் ராமசாமி, முன்னாள் நிர்வாகி ஏ.கே.ராமசாமி,மாநிலக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், பாலகிருஷ்ணன், செல்வராஜ், ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.