tamilnadu

img

நாசாவிற்கு செல்லும் பள்ளி மாணவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., நேரில் வாழ்த்து

மதுரை:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்குச் செல்லும் மதுரை பள்ளி மாணவிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.மதுரை சர்வேயர் காலனியில் உள்ள  மகாத்மா மேல்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவி ஜே.தான்யா தஸ்னம் என்பவர் அமெரிக்காவில் அமைந்துள்ள “நாசா” விண்வெளிஆராய்ச்சி மையத்தைபார்வையிட்டு, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட தேர்வாகியுள்ளார். இவர் அக்டோபர்  1 ஆம் தேதியன்றுசென்னையில் இருந்து செல்கிறார்.கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும்பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வுசெய்து  ‘நாசா’விற்கு அனுப்பிவருகிறது.கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய்புஜிதா மற்றும்அபிஷேக்சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதில் ஜே. தான்யா தஸ்னம் முதலிடம் பிடித்தார். மாணவி ஜே. தான்யா தஸ்னத்தை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வியாழனன்று பள்ளிக்கு நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர்அங்குள்ள ஆசிரியர்களுக்குஆசிரியர் தின வாழ்த்துக்களைக் கூறினார். பள்ளித் தாளாளர் பிரேமலதா பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் சந்திரா மனோகரன்ஆகியோர் உடனிருந்தனர்.