tamilnadu

ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

மதுரை, அக்.10-  மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஆயுத பூஜை, நவராத்திரி விழாக்களை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக மல்லிகை, கனகாம்பரம், அரளி ஆகிய பூக்களின் கிலோ ரூ.800க்கும், முல்லை ரூ.700, பிச்சி ரூ.700, மெட்ராஸ் மல்லி ரூ.600, பட்டன்ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.250, செண்டு மல்லி ரூ.130, தாமரை ஒன்றுக்கு ரூ.20 விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நவராத்திரி விழாவின் முக்கிய நாட்களாகக் கருதப்படும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் காணப்படுகிறது. அதுமட்டுமன்றி பூக்களின் வரத்தும் சீராக உள்ள காரணத்தால், ஓரளவிற்கு கட்டுப்படியான விலை உள்ளது. அடுத்த ஒரு  சில நாட்களுக்கு இதே விலை நிலவரமே நீடிக்கும்என்றார்.