திரைக்கலைஞர் மனோஜ் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்
மறைந்த மனோஜ் அவர்களின் உடலுக்கு, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
திரைக்கலைஞர் மனோஜ் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், நடிகரும் இயக்குநரு மான மனோஜ் அவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுக மான மனோஜ் நடிகராகவும், இயக்குநராக வும் பணியாற்றியுள்ளார். அண்மையில் அவர் இருதய அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது மறைவிற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது தந்தை பாரதிராஜா, மனோஜ் அவர்களின் மனைவி மற்றும் அவரது மகள்கள் ஆகியோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மறைந்த மனோஜ் அவர்களின் உடலுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் ஆகி யோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.