ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயருகிறது
? பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடை யாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவை கள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக் கின்றன. இந்நிலையில், ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப் பட உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்த புதிய கட்டண மாற்றம் அக் டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்றும் கூடுதல் தகவல் வெளியாகி யுள்ளது. முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள ரூ.50இல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல ஆதார் அட்டையில் புகைப் படம் மாற்றம் உள்ளிட்ட பிற சேவைக்கான கட்டணம் ரூ.100இல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது என செய்தி கள் வெளியாகியுள்ளன. எனினும்இது குறித்து ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ) இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.