விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்
நாட்டில் கடந்த பத்தாண்டுக ளில் 1 லட்சத்து 17 ஆயிரம் விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், விவசாயிகளின் அவலத்தைப் போக் கிட, விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் இரா. சச்சிதானந்தம் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கள் நடைபெற்று வருகின்றன. இதில், வெள்ளிக்கிழமையன்று வேளாண்மை மற்றும் விவசாயி களின் நலன் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று ஆர். சச்சிதானந்தம் பேசியதாவது: 2025-26ஆம் ஆண்டுக்கான விவ சாயம் மற்றும் விவசாயிகள் நலன் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் என் கருத்துக்களைக் கூற விரும்பு கிறேன். விவசாயிகளே நாட்டின் முது கெலும்பாவார்கள். உண்மையில் அவர்கள்தான் நமக்கு உணவு அளிக்கும் அன்னதாதாக்கள் (annadatas) ஆவர்.
இந்தியா வில் சுமார் 15 கோடி பேர் விவசாயி களாக இருக்கிறார்கள். ஆயினும் ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கென்று வெறும் 1 லட்சத்து 37 ஆயிரத்து 757 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மொத்த பட்ஜெட் தொகையில் வெறும் 2.7 சதவிகிதம் மட்டுமே யாகும். இந்தத் தொகையில் 92 சத விகிதம் விவசாயத்திற்காகவும், மீதம் உள்ள 8 சதவிகிதம் மட்டுமே விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக் கிறது. இது சரியல்ல. பிரதமர் கிசான், பயிர்க் காப்பீடு மற்றும் பயிர்க் கடன் வட்டி ஆகிய மூன்று திட்டங்களுக்காகவும் மொத்தம் உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 757 கோடி ரூபாயில் 98 ஆயிரத்து 013 கோடி ரூபாய்தான், அதாவது 77 சதவிகிதம் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
இத்திட்டங்களின் மூலமாக சிறு-குறு விவசாயிகள் பயன் களைப் பெற மிகவும் சிரமப்படு கிறார்கள். விவசாயக் குடும்பங்களின் வரு மானத்தைப் பொறுத்தவரை, 54 சத விகிதம் அவர்கள் பெறும் ஊதி யங்களிலிருந்தும், 22 சதவிகிதம் அவர்களின் விவசாய உற்பத்திப் பொருள்களிலிருந்தும், 17 சதவிகி தம் கால்நடைச் செல்வங்களிலிருந் தும் பெறுகிறார்கள். இந்தியாவில் சரிபாதி விவசா யம் மழையை நம்பியே மேற்கொள் ளப்படுகிறது. புவி பருவநிலை மாற்றங்கள் காரணமாக சில சமயங்களில் மழை பெய்யாமல் பொய்த்துப் போகிறது. சில சம யங்களில் கடுமையாகப் பெய் கிறது. சில சமயங்களில் மிகவும் குறைவாகப் பெய்கிறது. மழை அதிகமாகப் பெய்யும்போது அதைச் சேமித்து வைத்திட எவ் விதத் திட்டமும் இல்லை. நீர்த்தேக்கங்கள் இல்லை. சமீப காலங்களில் நீர்த்தேக்கங்களோ அணைகளோ கட்டப்படவில்லை. பாசனத்திற்கு இவை அவசிய மாகும்.
அணைகள், நீர்த்தேக்கங் கள் கட்டுவதற்காகவும், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவும் நிதி ஒதுக்கப்பட வேண்டியது அவ சியமாகும். விவசாயக் கடன்கள் தள்ளு படி செய்யப்பட வேண்டியது இப் போது அவசியத் தேவையாகும். தேசியக் குற்றப்பதிவு நிலையத் தின் அறிக்கையின்படி நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் 1 லட்சத்து 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள் ளார்கள். எனவே சிறுகுறு விவசாயி களின் கடன்களை ரத்து செய்திட நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று விவசாயி களுக்குக் குறைந்தபட்சமாவது ஆதாயம் கிடைக்க வேண்டுமா னால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்துடன் சி2+50 சத விகிதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன்.