tamilnadu

img

இமானுவேல் சேகரன் தொண்டு உரமாகட்டும்: முதலமைச்சர்

சென்னை,செப்.11- தீண்டாமையை ஒழிக்கவும் சமூக விடுதலைக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் செப்டம்பர் 11. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: “நாட்டுக்காகவும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த அவரது வாழ்வைப் போற்றுவோம். சமத்துவமும் சமூக நல்லிணக்கமும் மிளிர்ந்த சமூகத்தை நோக்கிய நமது பயணத்துக்கு அவரது தொண்டு உரமாகட்டும்”  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.